‘1எம்டிபி நிதி’ பெற்றதாக எஸ்யுபிபிக்கு எதிராக எம்ஏசிசியிடம் புகார்

1எம்டிபியில்   கையாடப்பட்ட  பணத்திலிருந்து   எஸ்யுபிபி  குறைந்தது  ரிம1மில்லியனைப்  பெற்றிருப்பதாகக்  கூறப்படுவது   குறித்து   சரவாக்  பிகேஆர்  எம்ஏசிசியில்  புகார்   செய்துள்ளது.

2012இல்    அப்போதைய   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்    வங்கிக்  கணக்கிலிருந்து  அப்பணம்      வந்தது   என்று  ஸதம்பின்  பிகேஆர்   இளைஞர்   தலைவர்   மொ  குய்  சுங்  கூறினார்.

“1எம்டிபி   தொடர்பான  எல்லாப்  புகார்களும்   1எம்டிபி  பணிக்குழுவுக்கு   அனுப்பி  வைக்கப்படும்    என்று   எம்ஏசிசி    தெரிவித்தது”,  என்றவர்   கூறியதாக   போர்னியோ   போஸ்ட்   அறிவித்தது.

1எம்டிபிமீதான  விசாரணை  அறிக்கைகளிலிருந்து  கிடைத்த  தகவலின்   அடிப்படையில்   மொ   அப்பு்காரைச்     செய்துள்ளார்.

நஜிப்பின்    தனிப்பட்ட    வங்கிக்   கணக்கிலிருந்து   2012-இல்  ரிம500,000மும்  2013-இல்   ரிம500,000மும்  இரண்டு    தவணைகளில்   எஸ்யுபிபிக்கு  பணம்    சென்றுள்ளது.

அதன்பின்னர்  2013  மார்சில்  மேலும்  ரிம500,000மும்  அதனை  அடுத்து  ரிம2 மில்லியனும்,  ஆக   மொத்தம் ரிம3.5மில்லியன்   அக்கட்சிக்குக்  கொடுக்கப்பட்டுள்ளதாம்.