நீக்கப்படும் அவமானத்திற்கு ஆளாகாமல் இருக்க பணியிலிருந்து விலகிக் கொள்ளுங்கள், அபாண்டிக்கு கிட் சியாங் ஆலோசனை

 

 

சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அபாண்டி அலி தாமாகவே பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். இல்லையேல் பதவியிருந்து அகற்றப்படும் அவமானத்திற்கு அவர் ஆளாக வேண்டியிருக்கும் என்று லிம் கிட் சியாங் கூறுகிறார்.

மே 9 லிருந்து கடந்த மூன்று வாரங்களாக அபாண்டி அலி அநாகரிகமாக ஏஜி பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார். மே 9 வாக்களிப்பு நஜிப்புக்கு எதிரானது மட்டுமல்ல. அது சட்டத்துறை தலைவரான அபாண்டிக்கும் எதிரானது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று கிட் சியாங் மேலும் கூறினார்.

கிட் சியாங், அபாண்டி அலி பதவி விலக வேண்டும் என்று கோரும் மூன்றாரவது டிஎபி நாடாளுமன்ற உறுப்பினராவார். மற்ற இருவர் ராம்கர்பால் சிங் மற்றும் கோபிந்த் சிங் ஆகியோராவர்.