டாக்டர் எம்: இனவாதம் கீழ்மட்டத்தில் நிறைந்து கிடக்கிறது

பிரதமர் துன் டாக்டர் மகாதிர், அவர் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இனவாத மனப்பான்மை கொண்ட தலைவர்கள் இல்லை என நம்புவதாகக் கூறுனார்.

அரசாங்கத்தில் மாற்றங்கள் இருந்தபோதிலும், கீழ்மட்டத்தில் இன உணர்வுகள் இன்னும் இருப்பதாக மகாதிர் கூறியுள்ளார்.

“புதிய அரசாங்கத்தில், உயர் மட்டத்தில் இனவாதம் குறைந்துள்ளது, ஆனால் கீழ் மட்டத்தில், இன உணர்வுகள் இன்னும் வலுவாகவே உள்ளன,” என்று பைனான்சியல் டைம்ஸ்-கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறினார்.

பிஎன் தோல்வியுற்று, ஹராப்பான் ஆட்சிக்கு வந்தால், மலாய் முஸ்லிம்களின் உரிமைகள் பாதிக்கப்படும் என அம்னோ நீண்ட காலமாக தனது வாக்காளர்களை எச்சரித்து வந்துள்ளது.

ஆயினும், மகாதிரே, இன அடிப்படையிலான பிரிபூமி பெர்சத்து கட்சியை (பெர்சத்து) உருவாக்கி, வழிநடத்தி வருகிறார்.

அம்னோ ஆதரவு மலாய்க்காரர்களைச் சமாதானப்படுத்தி, ஹராப்பான் மீது நம்பிக்கை ஏற்படுத்த பெர்சத்து கட்சி அவசியம் என அவர் வாதிட்டார்.

ஹராப்பான் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளான டி.ஏ.பி, பிகேஆர் மற்றும் அமானா ஆகிய மூன்றும் பல்லினக் கட்சிகளாகும்.