பேங்க் நெகரா நிதி அமைச்சிடமிருந்து வாங்கிய 67.41 ஏக்கர் நிலத்துக்குக் கொடுத்த விலை அதிகம் என்று நம்பப்படுகிறது. ரிம2.066 மில்லியனுக்கு அது அந்நிலத்தை வாங்கியது. அப்பணம் 1எம்டிபி கடனைக் கட்டுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதாம். த ஸ்டார் நாளேடு தெரிவிக்கிறது.
பேங்க் நெகாரா பயிற்சி வசதிகளுக்காகத்தான் அந்நிலத்தை வாங்கியது என்பதால் அதற்கு அவ்வளவு விலை கொடுத்திருக்க வேண்டியதில்லை என சில வட்டாரங்கள் தெரிவித்தன.
மே 24-இல், நிதி அமைச்சர் லிம் குவான் எங், இண்டர்நேசனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்துக்கு 1எம்டிபி கொடுக்க வேண்டிய கடனைக் கட்டுவதற்கு பேங்க் நெகாரா மற்றும் கருவூலத்தின் பணம் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறினார்.