பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கோலாலும்பூர்- சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தது அதிர்ச்சி அளித்ததுடன் கவலைகொள்ளவும் வைத்துள்ளது.
மலேசியாகினியிடம் பேசிய வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றின் அதிகாரி, அம்முடிவு குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் முன்கூட்டியே பேசியிருந்தால் நல்லதாக இருந்திருக்கும் என்றார்.
அதிட்டம் திடீரென்று இரத்துச் செய்யப்பட்டது மகாதிரின் முந்தைய சர்வாதிகாரப் பாணி நிர்வாகம் திரும்பி வருவதற்கான அறிகுறியா என்று சில தரப்புகள் கவலைகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
“எல்லாரும் கவலை கொண்டிருக்கிறார்கள். இது ஒருமுறை மட்டுமே எடுக்கப்பட்ட முடிவாக இருக்கட்டும். இதுவே வாடிக்கையாகி விடக்கூடாது”, என்றாரவர்.
மகாதிர் இம்முடிவைச் செய்தியாளர் கூட்டமொன்றில் அறிவிப்பதற்குமுன் அவரின் அமைச்சர்கள் மட்டுமல்லாமல் சிங்கப்பூரிடமும் அது குறித்துத் தெரிவிக்கவில்லை.
அத்திட்டத்தின் குத்தகைக்காக போட்டியிடும் சீனாவுக்கு ஜப்பானுக்கும்கூட அது பற்றித் தெரியாது.
யாருடைய கண்வழியே பார்க்கிறோமென்பது முக்கியம். மலேசிய அரசாங்கத்தின் இந்த முடிவால் பாதிக்கப்பட்ட நாட்டின் தூதரக அதிகாரியாக இருந்தால் அவர் கருத்து அவருக்கு மட்டுமே சரியாகும். மலேசியரின் துன்பத்தில் அண்டை நாடு இன்பம் காண்பது ஏற்புடையதல்ல என்பதை செம்பருத்தியின் வாசகரும் சொல்லலாம் அல்லவா?