சிலாங்கூர் மந்திரி பெசாராக நியமிக்கப்படவிருப்பவரின் தேர்வு இறுதிக்கட்டத்தில் இருப்பதாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் பிகேஆர் மிக அதிகமான இருக்கைகளைக் கொண்டிருப்பதால் அம்மாநிலத்தை பிகேஆர் தொடர்ந்து வழிநடத்தும் என்று ஷா அலாமில் அன்வார் இன்று கூறினார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் உள்ள 56 இருக்கைகளில் பிகேஆர் 21 இருக்கைகளைப் பெற்றுள்ளது. இதர கட்சிகள்: டிஎபி 16, அமனா 8, பெர்சத்து 6, பிஎன் 4 மற்றும் பாஸ் 1.
இன்று, சிலாங்கூர் அரண்மனையில் சிலாங்கூர் சுல்தானுடம் நடந்த ஒரு சந்திப்பில் அன்வார் பேசிய பல விவகாரங்களில் சிலாங்கூர் மந்திரி பெசார் தேர்வும் ஒன்றாகும்.
இச்சந்திப்பின் போது தற்போதைய மந்திரி பெசார் முகமட் அஸ்மின் அலியும் உடனிருந்தார்.