அன்வார்: இது நம்பிக்கையை உருவாக்கும் நேரம், மலாய்க்காரர்களை பயமுறுத்துவதல்ல

 

யூனிவர்சிட்டி டெக்னோலஜி மாராவை (யுஐடிஎம்) அனைத்து இனத்திற்கும் திறந்து விட வேண்டும் என்று ஹிண்ட்ராப் 2.0 விடுத்துள்ள கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், அதற்கான சரியான நேரம் இதுவல்ல, ஏனென்றால் மலாய்க்காரர்கள் இன்னும் இப்புதிய அரசாங்கம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கின்றனர் என்றார்.

அஸ்ட்ரோ அவானியுடன் நடத்திய ஒரு நேர்காணலில், ஹிண்டராப் 2.0 விடுத்துள்ள இக்கோரிக்கை தவறானது என்று தாம் கருத்தவில்லை. ஆனால் இது நம்பிக்கை உருவாக்குவதற்கான நேரம். இது போன்ற விவாதங்கள் பின்னர் நடத்தலாம் என்பது தமது கருத்து என்று தெரிவித்தார்.

இக்கோரிக்கை தவறான தோற்றத்தைத் தருகிறது. மலாய்க்காரர்கள் கவலையடைந்துள்ளனர். என்னைப் பொறுத்த வரையில், பெடரல் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பூமிபுத்ராக்களின் நலன்களைத் தியாகம் செய்துவிடாமல் நாம் அனைத்து மக்களின் உரிமைகளையும் தற்காப்போம் என்ற வலுவான நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்று அன்வார் மேலும் கூறினர்.

ஹிண்ட்ராப் 2.0 க்கு பி. உதயகுமார் தலைமை ஏற்றுள்ளார்.