எச்எஸ்ஆர் இரத்து: மலேசியா துன்பப்படும், சைனா டெய்லி கூறுகிறது

 

கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவிரைவு இரயில் திட்டம் (எச்எஸ்ஆர்) இரத்து செய்யப்பட்டது மலேசியாவுக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று சைனா டெய்லியில் ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று, குளோபல் டைம்ஸ் செய்தியாளர் ஹு வெய்ஜியா எச்எஸ்ஆர் திட்டம் இரத்து செய்யப்பட்டது குறித்து மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மலேசியாவின் புதிய பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் அத்திட்டத்தை தூக்கி எறிந்துவிட்டதன் மூலம் சீனாவின் அல்லது இதர பொருளாதார பங்காளிகளின் நலன்கள் பாதிக்கப்படலாம் என்று கூறும் அவர், மகாதிருக்கு முந்தியவர் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யவும், சீன நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் மகாதிர் விரும்பினால், அந்நிறுவனங்களுக்கு நஷ்டஈடு கோரும் உரிமை உண்டு என்றாரவர்.

சீன நிறுவனங்களின் நலன்கள் மற்றும் உரிமைகள் ஆகியவற்றை பாதுகாப்பதற்காக சீன அரசாங்கம் திடமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் ஹூ கூறினார்.