லிம்முக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மேல்முறையீடு திரும்பப் பெறப்பட்டது

பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்படுவதற்காக எடுத்துக் கொண்ட மேல்முறையீடு நடவடிக்கைகளை சட்டத்துறை அலுவலகம் (ஏஜி) இன்று மீட்டுக் கொண்டது.

மூத்த அரசு தரப்பு வழக்குரைஞர் மைஷாரா ஜவ்ஹாரி இதற்கான மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டதாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்விடம் கூறினார்.

மேலும், செலவுத் தொகைக்கு உத்தரவிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இம்மனுவை லிம்மின் வழக்குரைஞர் மெர்வின் லாய் உறுதிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, இந்த அமர்வுக்கு தலைமையேற்றிருந்த நீதிபதி அப்துல் ரஹ்மான் செபிலி இந்த மேல்முறையீடு செலவுத்தொகைக்கான உத்தரவு இல்லாமல் நீக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.