14-வது பொதுத் தேர்தலின் தோல்வி, தங்களின் ஊக்கத்தை உடைக்காது, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு தரப்பாக தங்களை உருவாக்கும் என மஇகா இளைஞர் பிரிவு கூறியுள்ளது.
சிலாங்கூர் மஇகா இளைஞர் தலைவர், டி.கஜேந்திரன் இளைஞர் அணி நம்பிக்கை இழக்காது என உறுதியளித்தார்.
“மத்திய அரசை ஹராப்பானிடம் இழப்போம் என நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், பிஎன் இனி ஆளும் கட்சி அல்ல. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2013-2018 காலப்பகுதியில், சிலாங்கூர் மாநில மஇகா, அம்மாநில மக்களுக்குத் தங்கள் சேவையை வழங்கியுள்ளது என்றார் அவர்.
“பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்த, சிலாங்கூர் மக்களை நாங்கள் மதிக்கிறோம். எங்கள் தவறுகளுக்காக நாங்கள் மன்னிப்புக் கேட்கிறோம்.”
இளைஞர் பிரிவு எனும் வகையில், அவரும் அவரது கட்சி உறுப்பினர்களும், புதிய அரசாங்கம், குறிப்பாக சிலாங்கூரில், மக்களுக்குச் சேவை ஆற்றுவதை உறுதி செய்ய அழுத்தம் கொடுக்க தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.
“மாநிலத்திலும், மத்தியத்திலும் எதிர்க்கட்சியாக செயல்பட நாங்கள் தயாராக உள்ளோம். சிலாங்கூர் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை பக்காத்தான் ஹராப்பான் நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார் அவர்.
–பெரித்தா டெய்லி
1) #பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு தரப்பாக தங்களை உருவாக்கும்#
இதற்கு முன் இருந்த அரசாங்கத்தின் ஊழலுக்கு உடந்தையாக இருந்த பொழுது அழுத்தம் கொடுக்காமல்
தூங்கிக்கிட்டுயிருந்தவர் இன்று மகா தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டாரோ அல்லது இதுவும் வீராப்பிற்காகப்
பேசுவதா?
2) #நம்பிக்கை இழக்காது#
இழப்பதற்கு 'நம்பிக்கை' மட்டுமே மீதமிருப்பதையறிந்து அதையே இறுகப்பற்றிக் கொண்டு இனி ஐந்து
ஆண்டுகள் உயிர் வாழ்வோமென்று கூறுவது நம்பிக்கையை இழந்தவர் ஊட்டச்சத்தைத் தேடி போவது போல் உள்ளது.
3) #மத்திய அரசை ஹராப்பானிடம் இழப்போம் என நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை#
இவர்கள் நிச வாழ்க்கையில் வாழ்ந்திருந்தால் வரப்போகும் ஆழியை உணர்ந்திருப்பார். கனவு உலகில் வாழ்ந்து
மமதையில் அழிந்தார் என்பதயே மேற்காணும் கூற்று உணர்த்துகின்றது.
4) #எங்கள் தவறுகளுக்காக நாங்கள் மன்னிப்புக் கேட்கிறோம்#
உங்கள் தவறு எவை எவையென்று பட்டியலிட்டுக் கூறிவிட்டு மன்னிப்பு கேளுங்கள். மக்கள் மன்றலில் மன்றாடுங்கள்.
அவர்கள் மன்னிப்பார்களாவென்று பார்ப்போம்.
5) #புதிய அரசாங்கம், குறிப்பாக சிலாங்கூரில், மக்களுக்குச் சேவை ஆற்றுவதை உறுதி செய்ய அழுத்தம் கொடுக்க
தயாராக இருப்பதாக#
கட்சிக்கு மாநில சட்டசபையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஓரிடமில்லை! அழுத்தம் சட்டசபையிலா அல்லது
சட்டைப் பையிக்குள் விழும் சில்லரையைப் பொறுத்து அமைந்திருக்குமா?
6) #சிலாங்கூர் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை பக்காத்தான் ஹராப்பான் நிறைவேற்றும் என்று
நாங்கள் நம்புகிறோம்,”#
தே.மு. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாது என்பதைத் தெரிந்து கொண்டு இனி கல்லை
எங்கே எறியலாமென்று கனவு காண்கின்றீர்!
இத்தகைய இளைஞர் பிரிவுத் தலைவர் தமிழருக்குத் தேவையா?
Malaysian Indian are no more stupstu to believe all this clowns. You better go and continue your sleep.