மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணைய விசாரணைக்கு வர ரோஸ்மாவுக்கு உத்தரவு

எஸ்ஆர்சி இண்டர்நேசனல் செண்ட். பெஹாட் விவகாரம் குறித்து விசாரிக்கப்படுவதற்காக மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) அடுத்த செவ்வாய்க்கிழமை புத்ரா ஜெயாவிலுள்ள அதன் தலைமையகத்திற்கு வர ரோஸ்மா மன்சோருக்கு உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவின்படி, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக அங்கு காலை மணி 11.00 இருக்க வேண்டும்.

கடந்த வாரம், எஸ்ஆர்சி இண்டர்நேசனல் விவகாரம் குறித்து நஜிப்பின் வாக்குமூலத்தை எம்எசிசி இரு முறை பதிவு செய்தது.

எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நொடித்த நிலையில் இருப்பதால் அதன் சொத்துகள் தேவையான வருமானத்தை ஈட்டவில்லை. அதன் காரணமாக அது கேடபுள்யுஎபியிடமிருந்து (Kwap)பெற்ற கடனைக் கட்ட இயலாது என்று கடந்த புதன்கிழமை மலேசியாகினி ஓர் அறிக்கையில் கூறிற்று.