அம்னோவை வழிநடத்த, அக்கட்சியின் இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் சிறந்த வேட்பாளர் என்று டாக்டர் மகாதிர் கூறியுள்ளார்.
அதைப்பற்றி விரிவாகக் கூறாமல், அம்னோ தனது போராட்ட திசையைத் தீர்மானிக்க முடியாமல் குழப்பத்தில் காணப்படுவதால், அதனை முன்னின்று வழிநடத்த கைரி சிறந்த தேர்வு என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவரான மகாதிர் தெரிவித்தார்.
கடந்த மே 22-ல், அம்னோவின் தற்காலிக தலைவர் அஹ்மட் சைட் ஹமிடி, இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள அம்னோ தேர்தலில், அனைத்து பதவிகளுக்கும் யார் வேண்டுமானாலும் சுதந்திரமாகப் போட்டியிடலாம், தலைவர், துணைத் தலைவர், உதவித் தலைவர்கள் உட்பட என்று அறிவித்திருந்தார்.
-பெர்னாமா