தீபக்கின் முதல் தற்காப்பு அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது

மங்கோலியப் பெண், அல்தான்துயா ஷரிபூ படுகொலை தொடர்பாக, பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி, ஏ.செந்தமிழ்ச் செல்வி தாக்கல் செய்த வழக்கில், தீபக் ஜெய்கிஷனின் முதல் தற்காப்பு அறிக்கையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று ஏற்றுக்கொண்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி, வழக்கறிஞர் அமிரிக் சிடுவிடம் அந்தத் தற்காப்பு அறிக்கை வழங்கப்பட்டது.

தீபக், தனது புதிய வழக்கறிஞர் வினோத் கமலமதன் வழி, இன்று செந்தமிழ்ச் செல்வியின் வேண்டுகோளுக்கு இணக்கம் தெரிவித்தோடு, கடந்தாண்டு நவம்பர் 7 அன்று, மூத்த வழக்கறிஞர் முகமட் ஷஃபீ அப்துல்லா தாக்கல் செய்த, இரண்டாவது தற்காப்பு அறிக்கை நிராகரிக்கப்பட்டதையும் ஏற்றுக்கொண்டார்.

தீபக்கைப் பிரதிநிதிக்க ஷாஃபிக்கு எந்த அதிகாரமும் இல்லை என, அனைத்து தரப்பினரையும் அறையில் சந்தித்த பின்னர், நீதிபதி ஹூய் சியூ கேங் முடிவு செய்தார்.