முன்னாள் அம்னோ அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசிஸ், பக்கத்தான் ஹரப்பான் அரசு தாராள மனத்துடன் பிஎன் வென்ற தொகுதிகளுக்கு ஆண்டு நிதி ஒதுக்கீடாக ரிம100, 000 கொடுக்க முன்வந்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
“நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில் மகிழ்ச்சி. பக்கத்தான் ஹரப்பான் தொகுதிகளுக்குக் கொடுக்கப்படுவதைவிட குறைவாக இருந்தால்கூட புரிந்துகொள்ளக் கூடியதே. அவர்களின் தொகுதிகளுக்கு அவர்கள் முன்னுரிமை அளிப்பது இயல்பே.
“இந்த ரிம100,000 பணத்தை எதிரணி எம்பி-இடம் கொடுக்காமல் எதிரணி தொகுதிகளில் அவர்களே செலவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். அது பின்னர் பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
“பணம் மக்களைச் சென்றடையதுதான் முக்கியம், யார் அதைச் செலவிடுகிறார்கள் என்பது முக்கியமல்ல”, என்றார்.
எதிரணித் தொகுதிகளைக் கவனித்துக்கொள்வதும் அரசாங்கத்தின் பொறுப்புத்தான் என்றாரவர்.