அல்தான்துயா கொலையாளி சிருல் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்

 

அல்தான்துயாவை கொலை செய்தவர்களில் ஒருவரான முன்னாள் போலீஸ் கொமாண்டோ சிருல் அஸ்ஹார் ஒமார் ஒரு மாதத்திற்குள் மலேசியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று த கார்டியன் அதன் இன்றையச் செய்தில் கூறுகிறது.

மலேசியா விடுத்திருந்த வேண்டுகோளை ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், சிருலை முறையாக நடத்தவும், அவரை திருப்பி அனுப்புவதற்கான செலவை மலேசியா ஏற்றுக்கொள்ள மலேசியா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அச்செய்தி கூறுகிறது.

அச்செய்தியை உறுதிப்படுத்த உள்துறை அமைச்சையும் சட்டத்துறை தலைவர் (ஏஜி) அலுவலகத்தையும் தொடர்புகொள்ள மலேசியாகினி முயன்று வருகிறது.