மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிரான வெறுப்பு தூண்டிவிடப்படுவதால் சிலாங்கூர் சுல்தான் திகிலடைந்துள்ளார்

 

மலாய் ஆட்சியாளர்களை பகிரங்கமாக அவமதித்தல், சிறுமைப்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டிவிடுதல் போன்ற நடவடிக்கைகள் குறித்து சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரீஸ் ஷா திகிலடைந்திருப்பதாக கூறினார்.

இதில் வருத்தத்திற்குரிய இவற்றை செய்பவர்கள் மலாய்க்காரர்களே என்று கிள்ளானில் இன்று ஒரு நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் பேசிய சுல்தான் கூறினார்.

இந்நாட்டில் மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றின் நிலையையும் அவற்றுடன் மற்ற இனங்களின் நிலையையும் உறுதிப்படுத்தும் ஈடுபாட்டை அரச அமைப்பு கொண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

அரச அமைப்பு அரசமைப்புச் சட்டத்துடன் ஒத்துப் போகும் என்றும் கூறிய சுல்தான், இந்நாட்டில் நடைமுறையிலிருக்கும் அரசமைப்புச் சட்டத்திற்குட்பட்ட முடியாட்சியில் அது ஆற்ற வேண்டிய பங்கு இன்னும் உண்டு என்றும் சுல்தான் கூறினார்.

சில தரப்பினரிடம் காணப்படும் வெறுப்பு உணர்ச்சி கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் மலாய் ஆட்சியாளர்கள் மீதான மக்களின் விசுவாசம் சிதைக்கப்படும் அளவிற்கு மக்கள் தூண்டிவிடப்பட மாட்டார்கள் என்று சுல்தான் மேலும் கூறினார்.