நஜிப் மீது குற்றம் சாட்டுவதில் அவசரம் வேண்டாம், மகாதிர் எச்சரிக்கிறார்

 

1எம்டிபி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் மீது குற்றம் சாட்டுவதில் அவசர நடவடிக்கைகள் எடுக்கும் முயற்சிக்கு எதிராக பிரதமர் மகாதிர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“நாம் எப்போது நஜிப்பை கைது செய்யப் போகிறோம் என்பதற்காக பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது அவ்வளவு சுலபமானதல்ல. நீதிமன்றம் ஏற்றுகொள்ளக்கூடிய ஆதாரங்களை நாம் சேகரிக்க வேண்டி இருக்கிறது.

“நாம் அதைச் செய்யத் தவறி விட்டால், அவர் வெற்றி பெறக்கூடும். அந்த வழக்கில் அவர் வெற்றி பெற்று விட்டால், அவர் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பளிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“நாம் அளித்த வாக்குறுதிகள், அவரைப் பற்றி நாம் கூறிய கெட்டவைகள் பற்றி நமக்கு வாக்களித்த மக்கள் நம்மிடம் கேள்வி கேட்பார்கள்”, என்று ஜப்பானில் இன்றிரவு நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில் மகாதிர் கூறினார்.

நஜிப் குற்றவாளி என்ற தீர்ப்பைப் பெற வலுவான ஆதாரங்கள் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய விரும்புகிறது என்று அவர் மேலும் கூறினர்.

“அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டுவதற்கு போதுமான ஆதரங்களை நம்மால் திரட்ட முடியும் நாம் நம்புகிறோம். மேலும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படுவார் என்ற நம்பிக்கையையும் கொண்டுள்ளோம்”, என்று மகாதிர் கூறினார்.