பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட், ஒரு புதிய தேசியக் கார் திட்டத்தை நிறைவேற்ற விரும்புவதாக வலியுறுத்தியுள்ளார், புரோட்டனின் கிட்டத்தட்ட பாதி பங்கு சீனாவிற்கு விற்கப்பட்ட நிலையில்.
“புரோட்டன் இப்போது தேசியக் கார் இல்லை.
“அது இப்போது சீனாவுக்குச் சொந்தமானது.
“ஆசிய நாடுகள் மற்றும் நமது பங்காளிகளின் உதவியுடன் இன்னுமொரு தேசியக் கார் தொடங்க நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர், இன்று ஜப்பான், டோக்கியோவில் நிக்கேய் கூட்டத்தில் கூறினார்.
கடந்த ஆண்டு, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் நிர்வாகத்தின் போது, 49.9 விழுக்காடு புரோட்டன் பங்குகள் ‘கீளி’ (Geely) நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.
சேட் மொக்தார் அல்புகாரிக்குச் சொந்தமான டிஆர்பி- ஹைகோம் (DRB-Hicom) நிறுவனம், இன்னும் 50.1 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கிறது.