‘மருத்துவமனையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதே என் கே.பி.ஐ.’

அரசாங்க மருத்துவமனைகளில் காத்திருக்கும் செயல்முறைகளைத் துரிதப்படுத்துவதற்கான வழிகளை ஆராயவுள்ளதாகப் புதிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஜுல்கிப்ளி அஹ்மட் உறுதியளித்தார்.

சில மருத்துவமனைகளால் அவ்வாறு செய்ய முடிகிறது என்றும் நாடு முழுவதும் அதனைச் செயல்படுத்த இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“இது என் கே.பி.ஐ.-இன் (செயல்திறன் காட்டி அட்டவணை) ஒரு பகுதியாகும்,” என்று அவர் மலேசியாகினியுடனான ஒரு பேட்டியில் கூறினார்.

அவர், இச்செயல்முறை முக்கியமானது, குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு என்றார்.

அமானா கட்சியைச் சேர்ந்த அவர், பின்பற்றுவதற்கு மேலும் பல வழிகள் உள்ளன, அதாவது மே 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மூத்த குடிமக்கள், உடற்பேறு குறைந்தோர் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்றவை.

ஜொகூர் பாரு, சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனை சில செயல்முறைகளைக் காட்டியுள்ளது, இங்கு கதிரியக்க சிகிச்சைக்காக காத்திருக்கும் நேரம் 16-ல் இருந்து, இரண்டு வாரங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

“எலும்பியல் நோயாளிகளுக்கான சிகிச்சை நேரம், 112 நிமிடங்களிலிருந்து 68 நிமிடங்களாகக் (சிகிச்சை) குறைக்க முடிந்திருக்கிறது,” என்று அவர் கூறினார்.

துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில், டாக்டரைச் சந்திக்க காத்திருக்கும் நேரம் 56 நிமிடங்களிலிருந்து 48 நிமிடங்கள் என, 13.3 விழுக்காடு குறைந்துள்ளதாக டாக்டர் ஜுல்கிப்ளி கூறினார்.

வார்டில் அனுமதிக்கக் காத்திருக்கும் நேரம், 40 விழுக்காடு குறைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.