சரவாக் பிஎன்னில் நான்கு பங்காளிக் கட்சிகள் விலகிக் கொண்டதை அடுத்து அது கலைக்கப்பட்டது.
விலகிய நான்கும் -பிபிபி, எஸ்யுபிபி, பிஆர்எஸ், பிடிபி- சேர்ந்து “Gabungan Parti Sarawak” (ஜிபிஎஸ்)” என்ற பெயரில் புதிய மாநிலக் கூட்டணி ஒன்றை உருவாக்கிக் கொண்டுள்ளன.
சரவாக் முதலமைச்சரும் சரவாக் பிஎன் தலைவருமான ஆபாங் ஜொகாரி ஓபெங் இன்று பிற்பகல், கூச்சிங்கில் பிபிபி தலைமையகத்தில் இதை அறிவித்தார்.
அப்போது முன்னைய சரவாக் பிஎன் தலைவர்களும் உடன் இருந்தனர்.
“சரவாக் பிஎன் உறுப்புக்கட்சிகள் பிஎன்னிலிருந்து விலகுவது என ஒருமித்த முடிவெடுத்து சரவாக் கட்சிகளைக் கொண்ட புதிய கூட்டணியை காபோங்கான் பார்டி சரவாக் என்ற பெயரில் அமைத்துள்ளன.
“பல வாத, எதிர்வாதங்களுக்குப் பிறகு 14வது பொதுத் தேர்தலுக்குப் பிந்திய அரசியல் நிலவரங்களைக் கருத்தில்கொண்டு அம்முடிவு எடுக்கப்பட்டது”, என்றாரவர்.
அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்…..
மே 9-க்கு முன்பு இப்படியெல்லாம் எதிர்காலத்தில் நடக்குமென்று எவரும் கனவு கண்டதில்லை. எது எப்படியோ, மலேசியா உடன்படிக்கையிலிருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோமென்று அறிக்கை விடாமலிருந்தால் அனைவருக்கும் நல்லது.