நாட்டின் மத்திய திறந்த சந்தைக் குழு, இந்த ஆண்டு வட்டி விகிதத்தை இரு மடங்கு அதிகரிக்க கோடிகாட்டியதன் விளைவாக, இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான, ரிங்கிட்டின் மதிப்பு கிட்டத்தட்ட 4.00-க்கு இறங்கியது.
இருப்பினும், ஐரோப்பிய மத்திய வங்கியின் (இசிபி) அளவுக்கு அதிகமான ஊக்கக் குறைப்புத் திட்டத்திற்குப் பின்னர், நிச்சயமற்ற தன்மை குறித்து சந்தை இன்னும் எச்சரிக்கையாகவே உள்ளது.
உலகளாவிய வட்டி வீத சூழலில் மிகப்பெரிய நடவடிக்கைகளில் முதலீட்டாளர்கள் இணைத்திருப்பதால், அவர்கள் இசிபி கூட்டத்திற்கு முன்னால் சந்தையில் நுழைய மாட்டார்கள் என்பதால், சந்தை பரிவர்த்தனையில் இன்று இருண்ட நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, ஓஆன்டா (OANDA) ஆசியா-பசிபிக் வர்த்தகத் தலைவர், ஸ்டீபன் இன்னஸ் கூறினார்.
காலை 9 மணியளவில், ரிங்கிட்டின் மதிப்பு 3.9920 / 9960-ல் இருந்து அமெரிக்க டாலருக்கு எதிராக 3.9930 / 9970 வரையில், புதன்கிழமையன்று மூடப்பட்டபோது மேற்கோள் காட்டப்பட்டது.
உள்ளூர் நாணயத்தின் மதிப்பு மற்ற முக்கிய நாணயங்களைக் காட்டிலும் குறைவாகவே வர்த்தகம் செய்யப்பட்டது.
ரிங்கிட் சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 2.9892 / 9933-இல் இருந்து, 2.9874 / 9908 வரை குறைவாகவும், பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக 5.3394 / 3468-க்கு 5.3241 / 3311-ஆகவும் இருந்தது.
- பெர்னாமா