கோலாலும்பூர்- சிங்கப்பூர் அதிவிரைவு இரயில் திட்டத்துக்குப் பதிலாக செலவுகுறைந்த மாற்றுத் திட்டமொன்று அரசாங்க ஆலோசகர் மன்றத்தின் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக த ஸ்டார் அறிவித்துள்ளது.
கெரேதாஅபி தானா மலாயு(கேடிஎம்) இப்போது வைத்துள்ள இரட்டைத் தட இரயில் பாதையைத் தரம் உயர்த்தி அதையே புதிய திட்டத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். எச்எஸ்ஆருக்கு ரிம60பில்லியனிலிருந்து ரிம70 பில்லியன்வரை செலவாகுமிடத்தில் இப்புதிய திட்டத்துக்கு ரிம20 பில்லியன் மட்டுமே செலவாகுமாம்.
தகவலறிந்த பல வட்டாரங்களை மேற்கோள் காட்டி த ஸ்டார் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
எச்எஸ்ஆர் திட்டத்தில் 90 நிமிடங்களில் சிங்கப்பூர் சென்று விடலாம். ஆனால், புதிய திட்டத்தில் பயண நேரம் 40 நிமிடம் கூடும். கோலாலும்பூரிலிருந்து சிங்கப்பூர் செல்ல 130 நிமிடமாகும்.
இத்திட்டப்படி மூன்றாம் தரப்புகள் கேடிஎம் இரயில் பாதைகளைப் பயன்படுத்திக்கொள்ளும்.
“அவை சிறப்பான இரயில் பெட்டிகளில் முதலீடு செய்து இரயில் சேவையை வணிக ரீதியில் நடத்த முற்படலாம்.
“இதனால் பயண நேரம் குறைவதற்கு வாய்ப்புண்டு”, என்று ஆலோசக நிபுணர் ஒருவர் தெரிவித்ததாக அறியப்படுகிறது.
mama