சிலாங்கூரின் புதிய எம்பி ஹரப்பான் கட்சிகளின் ஆதரவைப் பெற்றவரில்லையாம்: இட்ரிஸ் கூறுகிறார்

சிலாங்கூரின்  புதிய   மந்திரி  புசாராக    நியமிக்கப்பட்டிருக்கும்   அமிருடின்   ஷாரி   பக்கத்தான்   ஹரப்பான்   கட்சிகளின்   ஆதரவைப்  பெற்றவரில்லை  என்கிறார்   ஈஜோக்   சட்டமன்ற    உறுப்பினர்    டாக்டர்   இட்ரிஸ்    அஹமட்.

அனைத்து   ஹரப்பான்  கட்சிகளாலும்    ஏற்றுக்கொள்ளப்பட்ட   ஒரே   மந்திரி  புசார்   வேட்பாளர்   தான்   மட்டுமே  என்றாரவர்.

“பக்கத்தான்  ஹரப்பானின்   அனைத்துக்   கட்சிகளின்   ஆதரவும்   எனக்குத்தான்.   அமிருடினுக்கு   அஸ்மின்   அலி(முன்னாள்   சிலாங்கூர்   எம்பி   மற்றும்    சிலாங்கூர்   ஹரப்பான்  தலைவர்)யின்   ஆதரவு   மட்டும்தான்   உண்டு”,  என்றார்.

இன்று  காலை   அவரது   இல்லத்தில்   நடைபெற்ற   செய்தியாளர்   கூட்டத்தில்   இட்ரிஸ்,    ஹரப்பானின்  நான்கு  கட்சித்   தலைவர்களும்   கையொப்பமிட்டுக்  கொடுத்திருந்த   ஆதரவுக்  கடிதங்களின்  நகல்களைக்   காண்பித்தார்.

இட்ரிஸ்  மந்திரி   புசார்   ஆவதற்கு   ஆதரவு    தெரிவிக்கும்   அக்கடிதங்களில்   பிகேஆர்   தலைவர்    டாக்டர்   வான்  அசிசா    வான்  இஸ்மாயில்,  சிலாங்கூர்    பெர்சத்து   தலைவர்    அப்துல்   ரஷிட்   அஸாரி,  சிலாங்கூர்    அமனா    தலைவர்   இஸாம்  ஹஷிம்,   சிலாங்கூர்   டிஏபி    தலைவர்   டோனி   புவா    ஆகியோர்   கையொப்பட்டிருந்தன