பி.கே.ஆர். பொதுத் தலைவர் அன்வார் இப்ராஹிம், தவறான நடத்தை மற்றும் மோசடிகளை வெளிபடுத்தும் பொறுப்பை அமைச்சர்கள் அல்லது பிற நிறுவனங்களிடம் ஒப்படைக்கும்படி நிதியமைச்சருக்குப் பரிந்துரைத்தார்.
“நான் லிம் குவான் எங்-ஐ சந்தித்து, நிதி அமைச்சரின் நிலைப்பாடு மிகுந்த உணர்ச்சிபூர்வமானது என்று கூறியிருக்கிறேன்.
“ஒவ்வொரு அறிக்கையும் (நிதியமைச்சரின்) நேரடியாக முதலீட்டாளர்களைக் குறிக்கும்,” என்று, எதிர்வரும் வியாழனன்று, அஸ்ட்ரோ அவானியின் ‘AI’ யில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ள ஒரு பேட்டியில் அன்வார் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஆட்சி பரிமாற்ற காலகட்டம் ஒரு நிச்சயமற்ற நிலைப்பாட்டைக் காட்டுவதால், நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான மதிப்பீட்டைக் கொடுக்கும். இது, மலேசிய மூலதனச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்கும், எனும் ‘மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ்’ அறிக்கை பற்றி கேட்டபோது அந்த முன்னாள் நிதியமைச்சர் இவ்வாறு கூறினார்.
“ஆனால், தற்போதைய சூழ்நிலையில், மோசடிகளை வெளிப்படுத்தும் அனைத்து விதமான உடன்படிக்கைகளையும் சுட்டிக்காட்டும் அமைச்சரும் இதில் பொறுப்பு வகிக்கிறார்.
“அவர் ஒன்றிரண்டு அமைச்சர்கள் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆகியவற்றை இதற்காக நியமிக்கலாம்,” என்ற அன்வார், இதன்வழி முதலீட்டாளர்களைச் சமாதானப்படுத்தவும், அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளை முன்னெடுக்கவும் குவான் எங்-கிற்கு அது உதவும் என்றார்.
குவான் எங்-உடனான சந்திப்பின் போது, அவரிடம் இதனைக் கூறியதாக அன்வார் தெரிவித்தார்.