2009-ஆம் ஆண்டு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) காவலில் இருந்தபோது, இறந்துபோன அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹோக் மரணம் குறித்து, இன்று மாலை மூன்று மூத்த டிஏபி தலைவர்கள் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தவுள்ளனர்.
அமைச்சர்களான, டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ மற்றும் தேசிய ஏற்பாட்டு செயலாளர் அந்தோனி லோக் ஆகிய மூவரும் அக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் ஈன் யோங் ஹியான் வா-க்கு உதவியாளராக இருந்த தியோ, ஷா ஆலாம் எம்ஏசிசி அலுவலகத்தில், ஒரு விசாரணையில் இருந்தபோது இறந்துபோனார்.
இந்தச் சம்பவத்தில் மூன்று எம்ஏசிசி அதிகாரிகள் மீது நேரடியாக குற்றம் சாட்டப்பட்டாலும், தியோ மரணத்தில் எவரும் இதுவரை குற்றவாளி ஆக்கப்படவில்லை.
நஜிப் நிர்வாகத்தின்போது நடந்த ஊழல்களை மறுபரிசீலனை செய்யும், தற்போதைய ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ள டிஏபியின் முயற்சியில், இன்று இதுவும் ஒன்றாகக் காணப்படுகிறது.
கோபிந்த் சிங்கின் சகோதரர் ராம்கர்ப்பால் சிங், மங்கோலிய பெண் அல்தான்துயா ஷாரிபூ கொலை வழக்கில், அவரது தந்தை செடேவ் ஷாரிபூவைப் பிரதிநிதிக்கிறார். அல்தாந்துயா இறப்பு, நஜிப்பின் பாதுகாப்பு விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2006-ஆம் ஆண்டு நடந்த தனது மகளின் கொலை தொடர்பாக, புதிய விசாரணையைத் தொடுங்குவதற்கான முயற்சியில் இன்று செடேவ் ஒரு போலிஸ் அறிக்கையைச் சமர்ப்பித்தார். இன்று மாலை அவ்வழக்குத் தொடர்பாக, பிரதமர் மகாதிரைச் சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
– மெலேய் மெயில்