அபு தாலிப்: 1எம்டிபி விசாரணைகள் கிட்டத்தட்ட முடிவுற்று விட்டன

 

1எம்டிபி மீது மேகொள்ளப்பட்ட பல்முனை விசாரணைகள் கிட்டத்தட்ட முடிவுற்று விட்டன என்று 1எம்டிபி விசாரணைக் குழுவின் தலைவர் அபு தாலிப் ஓத்மான் கூறினார்.

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைவர் முகம்ட் ஷூகிரி மற்றும் அதன் முன்னாள் தலைவர் அபு காசிம் ஆகியோரைச் சந்தித்த பின்னர் அபு தாலிப் இதனைக் கூறினார்.

1எம்டிபி பணிப்படையைச் சேர்ந்த அவ்விருவரும் அவர்களின் மிக அண்மையக் கண்டுபிடிப்புக்கள் பற்றி தமக்கு விளக்கம் அளித்ததாக அவர் தெரிவித்தார்.

விசாரணைகளில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதோடு அவை கிட்டத்தட்ட முடிவுற்று விட்டன என்றும் அவற்றின் மீதான அறிக்கை சட்டத்துறை-தலைவரின் அலுவலகத்தில் (ஏஜி அலுவலகம்) தாக்கல் செய்யப்படும் என்றும் அபு தாலிப் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.

எஸ்ஆர்சி இன்டர்நேசனல் மீதான விசாரணையும் அவற்றில் அடங்கும் என்பதை தாலிப் உறுதிப்படுத்தினார்.