கெராக்கான் பிஎன்னிலிருந்து வெளியேறுகிறது

 

கடந்த பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் (பிஎன்) தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிஎன் கூட்டணி உறுப்புக் கட்சியான கெரக்கான் கட்சியும் அக்கூட்டணியிலிருந்து இப்போது வெளியேறுகிறது.

இவ்விவகாரத்தை விவாதிக்க இன்று மதியத்தில் கூட்டப்பட்ட அக்கட்சியின் சிறப்புக் கூட்டத்தில் பிஎன்னை விட்டு வெளியேறுவதற்கான முடிவு அறிவிக்கப்பட்டது. கெராக்கான் கட்சி பிஎன்னின் ஒரு பங்காளியாக கடந்த 40 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது.

பிஎன்னிலிருந்து கெராக்கான் வெளியேறுவது பிஎன் நாடாளுமன்ற இருக்கைகளின் எண்ணிக்கையைப் பாதிக்காது. ஏனெனில், அக்கட்சி 14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.