கேஜே: நிதி அமைச்சரின் மெண்டரின் மொழி அறிக்கையைத் தற்காத்துப் பேசுவதை ஏற்பதற்கில்லை

நிதி  அமைச்சர்  லிம்   குவான்   எங்   மெண்டரின்  மொழியிலும்    அறிக்கைகள்  வெளியிடுவதைத்    தற்காத்துப்   பேசுவதை  ஏற்றுக்கொள்ள   இயலாது   என  அம்னோ   தலைவர்    வேட்பாளர்   கைரி   ஜமாலுடின்  கூறினார்.

லிம்   மொழி  விசயத்தில்   ஒரு   புதிய   நடைமுறையை   உண்டாக்கப்   பார்க்கிறார்   என்று    கூறிய   கைரி,  இது   பகாசா   மலேசியாவைத்   தேசிய  மொழியாக   ஊக்குவிப்பதைத்   தடுக்கும்   ஒரு   முயற்சி    என்று   சாடினார்.

“அந்த   அறிக்கை   அனைத்துலக   மக்களுக்காக   விடுக்கப்பட்ட  ஒன்று   என்றால்   அதை   ஆங்கிலத்தில்   வெளியிட்டிருக்கலாமே.  மெண்டரின்  பயன்படுத்த   வேண்டிய   அவசியமில்லையே.

“இச்செயல்   பெரும்பான்மை   மக்களிடையே   ஆத்திரத்தை  உண்டாக்கலாம்  என்று   அஞ்சுகிறேன்”,  என  கைரி  முகநூலில்   பதிவிட்டிருந்தார்.