1எம்டிபிக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதற்கெதிராக முன்னாள் திரெங்கானு மந்திரி புசார் அஹமட் சைட் இன்று காலை புத்ரா ஜெயாவில் எம்ஏசிசி தலைமையகத்தில் புகார் செய்தார்.
இன்று பிற்பகல் கிஜால் சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர் கூட்டமொன்றை நடத்துகிறார்.
மூன்றாண்டுகளுக்குமுன்பே அஹமட் சைட், 1எம்டிபிக்கு முன்னிருந்த திரெங்கானு முதலீட்டு நிறுவனம் (டிஐஏ) 2008-இல் திரெங்கானுவின் எண்ணெய், எரிவாயு வளங்களைப் பிணை வைத்து கடன் பெற முனைந்தது என்ற தகவலை வெளியிட்டிருந்தார்.
2009-இல் புத்ரா ஜெயா டிஐஏ-யை எடுத்துக்கொண்டதும் அது 1எம்டிபி என்று பெயர் மாற்றப்பட்டது.
பல பிரச்னைகளின் காரணமாக தம் நிர்வாகத்தின்கீழ் இருந்த மாநில அரசு அந்நிறுவனத்திலிருந்து விலக நேர்ந்தது என்றும் அதனால் அப்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆத்திரமடைந்தார் என்றும் அவர் சொன்னார்.