அரசாங்கக் கொள்கைகள் குறித்து அன்வார் இப்ராகிம் அடிக்கடி கருத்துரைக்கிறார். அண்மையில் அவர், நிதி அமைச்சர் லிம் குவான் எங் முந்தைய அரசாங்கத்தில் நிகழ்ந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தும் வேலையைச் செய்யக்கூடாது என்று கூறியிருந்தார்.
இது சிலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைப் பொறுத்தவரை அன்வாரும் நாட்டு மக்களில் ஒருவர் என்பதால் கருத்துச் சொல்லும் உரிமை அவருக்கும் உண்டு என்கிறார்.
“அன்வாரும் மற்றவர்களைப்போல்தான். அவர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவில்லை. அதனால் அவர் அரசாங்கக் கொள்கைகள்மீது சொந்தக் கருத்தைத் தெரிவிப்பது தவறல்ல.
“அமைச்சரவையில் இருப்பவர்கள்தான் அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவை அப்படியே பின்பற்ற வேண்டும்.
“அமைச்சரவையில் இல்லாதவர்கள் சொந்தக் கருத்தைத் தெரிவிக்கலாம். விரும்பும் கருத்தைச் சொல்லலாம்”, என மகாதிர் சிங்கப்பூரின் சேனல் நியுஸ் ஆசியாவிடம் தெரிவித்தார்.