தெங்கு ரசாலி: நான் அம்னோ தலைவர் பதவிக்குப் போட்டியிட காரணம் மகாதிர்தான்

அம்னோ     தலைவர்     பதவிக்குப்   போட்டியிடும்      தெங்கு   ரசாலி   ஹம்சா,    அரசியல்  ஒய்விலிருந்து    திரும்பி   வந்து   தலைவர்   பதவிக்குப்  போட்டியிட  காரணமானவர்    பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்தான்     என்கிறார்..

தெங்கு  ரசாலி,   சேனல்   நியுஸ்   ஆசியா   ஊடகத்துக்கு   வழங்கிய    நேர்காணல்   ஒன்றில்  வயது   எதற்கும்    ஒரு  தடையல்ல  என்றார்.

“வயது     ஒரு    பொருட்டல்ல.  பிரதமருக்குக்கூட   வயது  93  ஆகிறது.

“அம்னோவுக்கு   நம்பிக்கையையும்  நன்மதிப்பையும்  திரும்பவும்   கொண்டுவர   நம்பகமான   தலைவர்   தேவை”,  என  அந்த   81-வயது   முன்னாள்   நிதி  அமைச்சர்   கூறினார்.

தெங்கு  ரசாலி,   1987-இல்   அப்போது   பிரதமராக    இருந்த   மகாதிரை  எதிர்த்து   அம்னோ    தலைவர்    பதவிக்குப்   போட்டியிட்டவர்.

போட்டியில்   தோற்றதால்     அம்னோவிலிருந்து   வெளியேறி     செமாங்காட் 46  கட்சியை  அமைத்தார். பிறகு  1998-இல்  மீண்டும்   அம்னோவில்   சேர்ந்தார்.

கட்சியைத்    திருத்தி  அமைக்க   பெரும்பாடு  பட   வேண்டியிருக்கும்  என்றாரவர்.

“நாட்டு  மக்களில்  40  விழுக்காட்டினர்  இளைஞர்கள்.  கட்சியின்  பழைய  பெருமையத்   திரும்பக்   கொண்டுவர    இளம்   நிபுணர்களையும்     அறிவார்ந்த  இளைஞர்களையும்  அதிகம்   சேர்த்துக்கொள்ள  வேண்டும்”,  என்றாரவர்