ரிம300 மில்லியன் திட்டம்: எம்எசிசி ஒரு ஜிஎல்சி டத்தோவை கைது செய்துள்ளது

 

ஓர் அரசாங்கத் தொடர்புடைய நிறுவனத்தின் (ஜிஎல்சி) தலைமை அதிகாரியை விசாரணைக்கு உதவுவதற்காக மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) கைது செய்துள்ளது.

புத்ரா ஜெயாவில் ரிம300 மில்லியன் மதிப்பிலான ஒரு மேம்பாட்டுத் திட்டத்தை டென்டர் வழி அளித்ததில் அந்த 59 வயதான ‘டத்தோ’ இன்று மதியம் அவரது அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களைக் கைப்பற்றுவதற்கு எம்எசிசி கிள்ளான் பல்லத்தாக்கில் மூன்று கட்டடங்களில் திடீர் சோதணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இக்கைது நடவடிக்கையை எம்எசிசியின் துணை தலைமை ஆணையர் (நடவடிக்கை) அஸாம் பாக்கி உறுதிப்படுத்தினார். ஆனால் அதற்கு மேல் அவர் எவ்வித விவரமும் அளிக்கவில்லை.