முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் தொடர்புள்ள வீடுகளில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் சரியான முறையில்தான் மதிப்பிடப்பட்டுள்ளன என இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) முகம்மட் பூஸி ஹருன் கூறினார்.
கைப்பற்றப்பட்ட பொருள்கள் மற்றும் நகைகளின் மதிப்பு ரிம900 மில்லியனுக்கும் ரிம1.1 பில்லியனுக்கும் இடைப்பட்டிருக்கலாம் என்பது வல்லுனர்களின் உதவியுடன் செய்யப்பட்ட ஒரு மதிப்பீடு என்று பூஸி செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.
“இவ்விசயத்தில் போலீசார் நிபுணர்கள் அல்லர். அதனால்தான் மதிப்பிடும் வேலையை வெளி நிபுணர்களிடம் ஒப்படைத்தோம்.
“போலீஸ் அதில் சம்பந்தப்படவில்லை. நிபுணர்கள்தான் மதிப்பிட்டார்கள். அவர்களின் அறிக்கையின் அடிப்படையில்தான் அறிவிப்பு செய்யப்பட்டது”, என்று புக்கிட் அமனாஇல் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.