நஜிப் அப்துல் ரசாக் மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று பிரதம்ர் மகாதிர் இன்று கூறினார்.
தற்போது அதிகாரிகள் 1எம்டிபி விவகாரம் மீதான ஆதரங்களைத் திரட்டி வருகின்றனர். அதோடு மங்கோலியப் பெண் அல்தான்துயாவின் கொலை சம்பந்தப்பட்ட ஆதாரங்களும் திரட்டப்படுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.
“அவர் (நஜிப்) விரைவில் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படுவார் என்று நான் நினைக்கிறேன்”, என்று இந்தோனேசியாவுக்கு அதிகாரப்பூர்வமான வருகை மேற்கொண்டிருக்கும் மகாதிர் அங்கு மலேசியர்களைச் சந்தித்த போது கூறினார்.
அல்தான்துயா கொலை சம்பந்தமாக மறுவிசாரணை நடத்தப்படும் என்றும் மகாதிர் கூறினார்.
முந்தைய அரசாங்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவற்றை தீர்ப்பதற்கு பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்திற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்றாரவர்.
-பெர்னாமா