ஒருங்கிணக்கப்பட்ட சோதணைச் சான்றிதழ் (யுஇசி) மாநில பொதுச் சேவைக்கு தகுதியளிக்கும் முறையான சான்றிதழ் என்று மலாக்கா மாநில அரசு எடுத்துள்ள முன்மாதிரியை பெடரல் அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
மலாக்கா முதலமைச்சர் அட்லி ஸாகாரி மாநில பொதுச் சேவையில் நுழைவதற்கு யுஇசி முறையான தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று சமீபத்தில் செய்திருந்த அறிவிப்பை கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ போயே தியோங் வரவேற்றார்.
இக்கொள்கை கல்வி மற்றும் அரசுக்குச் சொந்தமான அரசுத் தொடர்புடைய நிருவனங்களுக்கு எதிர்காலத்தில் விரிவுபடுத்தபடலாம் என்று அவர் இன்று வெளியுட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
கடந்த இரண்டு மாதங்களில் ஹரப்பான் மாநில அரசு யுஇசிக்கு செய்திருப்பது கடந்த 60 ஆண்டுகளில் பிஎன்னும் மசீசவும் செய்யத் தவறியதைவிட கூடுதலாகும் என்பதைச் சுட்டுக் காட்டிய கூ, மத்திய அரசு இதைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பெடரல் அரசாங்க அளவில், யுஇசி சான்றிதழை அங்கீகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூ அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்