ஜாஹிட் விசாரணைக்காக எம்ஏசிசி தலைமையகம் வந்தார்

அம்னோ   தலைவர்   அஹ்மட்  ஜாஹிட்  ஹமிட்,  அவரது  குடும்பத்தாருக்குச்  சொந்தமான   அறவாரியம்   குறித்து  வக்குமூலம்   அளிப்பதற்காக   இன்று  காலை    எம்ஏசிசி   தலைமையகம்   வந்தார்.

அவர்   தம்  மெய்க்காவலருடன்  வந்தார்.   வழக்குரைஞர்கள்   யாரும்    உடன்  வரவில்லை.

கட்டிடத்துக்கு   வெளியில்  காத்திருந்த   செய்தியாளர்களைப்  புன்னகையுடன்   நோக்கிக்   கையசைத்தவாறு   அவர்   கட்டிடத்தினுள்   சென்றார்.

அறவாரியத்தின் நிதியைத்    தவறாகப் பயன்படுத்தினார்   என்று  கூறப்படுவது   பற்றி  அவரிடம்   விசாரணை  செய்யப்படும்.

கிரெடிட்  கார்டு   கடன்களை   அடைப்பதற்கு    அறவாரியத்தின் நிதி  தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக்  கூறப்படுகிறது.

ஜாஹிட் ,  அந்நிதியிலிருந்து   ரிம800,000-டை   அவரும்   அவரின்  மனைவியும்   கொடுக்க  வேண்டிய   கிரெடிட்  கார்டு   கடன்களை   அடைப்பதற்கு     பயன்படுத்திக்  கொண்டார்   என்று    சந்தேகிக்கப்படுவதாக   த   ஸ்டார்    அறிவித்துள்ளது.