பொருளாதார அமைச்சர்: சீரமைப்புகள் வளர்ச்சிமீது தாக்கத்தை உண்டுபண்ணலாம்

பக்கத்தான்  ஹரப்பான்    அரசாங்கத்தால்   மேற்கொள்ளப்பட்டிருக்கும்   சீரமைப்புகள்   மலேசியப்   பொருளாதாரத்தில்   தாக்கத்தை   உண்டுபண்ணலாம்    என்கிறார்   பொருளாதார   அமைச்சர்   முகம்மட்  அஸ்மின்   அலி.

ஆனாலும்,  அது  வருங்காலத்தில்   நிலையான   வளர்ச்சிக்கு   அடிகோலும்.

“மலேசியப்   பொருளாதாரம்,  பொதுவாக,   அடிப்படையில்   வலுவானது. பேரியல்  மட்டத்தில்   அது   சிறப்பாக    செயல்படுகிறது.  நிலையான,  வலுவான   பொருளகத் துறையும்   நிதியியல்   துறையும்   அதற்கு   ஆதரவாக  உள்ளன.

“பொருளாதார  வளர்ச்சி  நிலையாக   இருப்பதற்கு    அரசாங்கம்   எப்போதும்  முன்னுரிமை    வழங்கும்    என்பதுடன்   மக்களுக்குச்  சிறப்பான   வாழ்க்கைத்தரம்  கிடைப்பதை   உறுதிப்படுத்துவதற்கும்  அது  அதிக   கவனம்   செலுத்தும்.

“இரண்டும்    ஒரே  நேரத்தில்   செய்யப்படும்   வேளையில்   அரசாங்கத்தின்  நிதி  நிலையும்   வலுப்படுத்தப்படும். பல்வேறு    சீரமைப்புப்  பணிகளால்    பொருளாதார   வளர்ச்சி    பாதிக்கப்படலாம்.  ஆனால்,  பாதிப்புகள்  குறுகிய-காலத்துக்குத்தான்  இருக்கும்.

“இந்தப்  பாதிப்பை    ஏற்றுக்கொள்ளத்தான்    வேண்டும். அரசாங்கத்தின்  நிதிநிலையை   வலுப்படுத்திப்  பொருளாதாரத்தைத்    திடமான,  நிலையான   வளர்ச்சிப்  பாதையில்    கொண்டு  செல்ல   அந்தத்  தியாகம்   அவசியமாகிறது”,  என்றார்  அஸ்மின்.