முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது நாளை குற்றம் சாட்டப்படும் என்று 1எம்டிபி பணிப்படை தெரிவித்துள்ளது.
இன்று மாலை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், நஜிப் மீது நாளை காலை கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று பணிப்படை கூறுகிறது.
முன்னாள் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டேயல், முன்னாள் எம்எசிசி தலைவர் அபு காசிம் முகமட், தற்போதைய எம்எசிசி தலைவர் முகமட் ஷுக்கிரி அப்துல் மற்றும் முன்னாள் போலீஸ் சிறப்புப் பிரிவு துணை இயக்குனர் அப்துல் ஹமிட் படோர் ஆகியோர் பணிப்படையில் அங்கம் பெற்றுள்ளனர்.
நஜிப் மீது பல்வேறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளன.
பீனல் கோட் செக்சன் 409 மற்றும் எம்எசிசி சட்டம் செக்சன் 23 ஆகியவற்றின் அவர் மீது குற்றம் சாட்டப்படலாம் என்று கூறப்படுகிறது.