முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நம்பிக்கை மோசடி செய்ததாக மூன்று குற்றச்சாட்டுகளும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
செஷன்ஸ் நீதிபதி சைனல் அபிடின் கமருடின் முன்னிலையில் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. குற்றச்சாட்டுகள் எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடையவை.
செஷன்ஸ் நீதிமன்றத்தில் நஜிப்பின் வாதம் இடம்பெறவில்லை. குற்றப் பத்திரிகை வாசிக்கப்பட்ட பின்னர் செஷன்ஸ் நீதிமன்றம் வழக்கை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி விட்டது. அங்குதான் நஜிப் தமக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பார். அங்கு அவர் பிணையிலும் விடப்படலாம்.
இவ்வழக்கில் அரசுத்தரப்பு வழக்குரைஞர்களுக்கு சட்டத்துறைத் தலைவர் டோம்மி தாமஸ் தலைமை தாங்குகிறார். நஜிப்புக்காக முகம்மட் ஷாபி அப்துல்லா ஆஜராகிறார்.