அரசியல் பழிவாங்கும் படலம் என்று கண்டனம் தெரிவிக்கிறார் நஜிப்
பெயரிலி 2427941469612457: “என்னைத் தற்காத்துக்கொள்ள இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை” என்கிறார் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். இப்போது நீங்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறீர்கள்.இதுதான் உங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு.
உங்கள்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைத் தெரிந்துகொள்ள மலேசியர்கள் ஆவலாகக் காத்திருக்கிறார்கள். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பிரதமர் பதவியை இழந்தபோதே இப்படியெல்லாம் நடக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்தே இருந்திருக்கும்.
இது நீங்களே தேடிக்கொண்ட ஒன்று. நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குங்கள். நீங்கள் தீனி போட்டு வளர்த்த நண்பர்கள் யாரும் அங்கு வர மாட்டார்கள் உங்களைப் பாதுகாக்க.
மக்கள் மன்றத்தில் -ஊடகங்களில்- விசாரணை நடப்பதாக கோபித்துக் கொண்டீர்கள். இப்போது உங்களைத் தற்காத்துக்கொள்ள ஒரு சரியான இடம் கிடைத்துள்ளது.
பாவி: அரசியல் பழிவாங்குதலா? இல்லவே இல்லை, நஜிப் அவர்களே. வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான். இதுதான் கர்மா. கச்சிதமாக செய்துமுடிக்கப்பட்ட குற்றம் என்று எதுவுமில்லை. உண்மை வெளிவரத்தான் செய்யும்.
சுகிசான்: ஒரு நேரத்தில் எல்லாம் வல்லவராக இருந்தவர் இன்று ஒன்றும் இல்லாதவராக மாறுவார் என்பதை யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா?
ஊழல்வாதிகளுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்.
பீமன்: மலேசியர்களில் பெரும்பாலோர் உங்களை நிரபராதி என்று நினைப்பதுபோல் நடந்து கொள்கிறீர்கள். இது அனுதாபத்தைப் பெறுவதற்கான முயற்சி. திட மனமுள்ளவராக இருந்தால் என்ன செய்வார். நடந்தை ஒப்புக்கொண்டு வருத்தப்படுவார்.
எப்படியோ, நீங்கள் சொல்வதுபோல் நீங்கள் குற்றமற்றவராக இருந்தால் அதை நிறுவ இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
கெட்டிக்கார வாக்காளன்: பிஎன் வெற்றி பெற்றிருந்தால் இப்படி ஒரு காணொளி வெளி வந்திருக்காது. 1எம்டிபி பற்றிய செய்தி வெளிவந்த நாளிலிருந்தே உண்மையை மறைக்க எத்தனையோ தகிடுதத்தங்கள் செய்யப்பட்டன.
பிரதமராக இருந்த நஜிப் எல்லாவற்றுக்கும் நாயகமாக இருந்தார். தி எட்ஜ் முதலிய ஏடுகளுக்கு எதிரான தடையுத்தரவு, கைது நடவடிக்கைகள் மூலமாக ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டுப் போடும் முயற்சிகள் நடந்தன.
எல்லாவற்றுக்கும் வாக்குப்பெட்டி முடிவு கட்டியது.
நஜிப் அதை எதிர்பார்க்கவில்லை. அவர் குற்றமற்றவர் என்பதை உறுதிப்படுத்த உதவக்கூடிய அரசியல் அதிகாரத்தை பிஎன் இழக்கும் என்பதை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
ரூபன்: அட, மலேசியர்களின் அனுதாபத்தைப் பெற எப்படியெல்லாம் நாடகமாடுகிறார். அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருந்தபோது என்ன ஆணவம், பண அரசியல், உருட்டல் மிரட்டல்.
அவரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருள்களைச் சற்று நினைத்துப் பாருங்கள். அவை ரிம650 மில்லியனுக்குமேல் கொடுத்து வாங்கப்பட்டவை. இன்றைய சந்தை நிலவரப்படி அவற்றின் மதிப்பு இன்னும் கூடுதலாக இருக்கக் கூடும்.
முதலில் சொன்னார் அவையெல்லாம் பல காலமாக சேகரிக்கப்பட்ட பொருள்கள் என்று. பிறகு மகளின் திருமணத்துக்கு வந்த பரிசுகள் என்றார். ரிம650 மில்லியனுக்குப் பரிசுப் பொருள்களா?