நஜிப் வழக்கு குறித்து ஊடகங்களில் விவாதிக்க இடைக்காலத் தடை

முன்னாள்  பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்   சம்பந்தப்பட்ட   வழக்குக்  குறித்து   ஊடகங்களில்   விவாதிப்பதற்குத்   தடை  விதிக்கக்   கோரி   எதிர்த்தரப்பு   செய்து  கொண்ட   விண்ணப்பத்தை  ஏற்று   உயர்  நீதிமன்ற   நீதிபதி   இடைக்காலத்   தடை  உத்தரவு   பிறப்பித்தார்.

ஊடகங்களில்    வெளிவரும்    அறிக்கைகள்    தம்  கட்சிக்காரரின்   வழக்கைப்    பாதிக்கும்   வகையில்   அமையலாம்   என்பதால்   அந்தத்   தடையுத்தரவு    அவசியம்   என்று   நஜிப்பின்    தலைமை    வழக்குரைஞர்    முகம்மட்  ஷாபி   அப்துல்லா   கூறினார்.

தம்  கட்சிக்காரரின்   வழக்கு   நீதிமன்றத்தில்    விவாதிக்கப்படுவதற்கு  முன்பே  ஊடகங்களில்  விவாதிக்கப்பட்ட   சம்பவங்கள்   நிறைய   உண்டு  என்றாரவர்.