முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆதரவாளர்கள் அவருக்கு நிதி உதவி அளிப்பதற்காக நிதி திரட்டத் தொடங்கியுள்ளனர்.
நஜிப் அவரது பிணைப் பணம் முழுவதையும் கட்ட இயலாமல் இருப்பதால் அவருக்கு உதவ நிதி திரட்டப்படுவதாக கூட்டரசுப் பிரதேச முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் முகமட் ராஸ்லான் ராப்பி கூறியதாக த ஸ்டார் ஒன்லைன் செய்தி கூறுகிறது.
சோதனை காலத்தில் அவருக்கு ஆறுதல் கூறவும் நிதி உதவி அளிக்கவும் நாங்கள் விரும்புகிறோம். நஜிப் ரிம500,000தான் கட்ட முடியும். மீதித் தொகைக்கு பாதுகாப்பாக அவர் அவரது வீட்டுப் பத்திரத்தைத் தந்துள்ளார். ஆகவே, நாங்கள் எங்கள் ஆறுதல் மற்றும் நிதி உதவியை அளிக்க விரும்புகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.
அந்த நிதியம் இன்று மதியம் நஜிப்பின் இல்லத்தில் தொடங்கப்பட்டது. மக்களின் ஆதரவு கோரப்படுகிறது என்று அச்செய்தி கூறுகிறது.
நேற்று, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் ரிம1 மில்லியன் பிணை விதித்தது. ரிம500,000-தை நஜிப் கட்டி விட்டார். மீதத்தை திங்கள்கிழமை கட்டுவார்.