அமர் சிங், 1எம்டிபி பற்றி பேசுவதை நிறுத்துவீர், அம்னோ தலைவர் எச்சரிக்கிறார்

 

வணிகக் குற்ற விசாரணை இலாகா இயக்குனர் அமர் சிங் மற்றும் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) 1எம்டிபி பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும். அப்படி பேசுவதன் மூலம் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் பற்றி எதிர்மறையான தோற்றம் உருவாக்கப்படுகிறது என்று கூட்டரசுப் பிரதேச முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் ரஸ்லான் ராஃபியி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“கூட்டரசுப் பிரதேச போலீஸ், எம்எசிசி மற்றும் அமர்: 1எம்டிபி பற்றி பேசுவதை நிறுத்துவீர். ஊடகங்கள் நஜிப் மீது தீர்ப்பு அளிப்பதை அனுமதிக்காதீர். நான் உங்களை எச்சரிக்கிறேன்.

“இது, அந்தப் பட்டியல், மில்லியன்கள் கைப்பற்றப்பட்டது … ரிம1.1 பில்லியன் பற்றி பேசுவதில் ஆர்வம் காட்டாதீர். இந்த எதிர்மறையான விவகாரங்களில் உண்மையில்லை மற்றும் அது நஜிப் பற்றி மக்களிடம் தவறான அபிப்பிராயத்தை உண்டு பண்ணுகிறது.

“அவர் குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்கட்டும். அரசு ஊழியர்கள் இந்த தோற்றம் விளைவிக்கும் ஆட்டத்தை ஆடக்கூடாது”, என்று நஜிப்பின் லங்காக் டூத்தா வீட்டிற்கு வெளியில் செய்தியாளர்களிடம் ரஸ்லான் கூறினார்.