இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சித்திக் அப்துல் ரஹ்மான் இப்போது 21 ஆக உள்ள வாக்களிக்கும் வயதை 18ஆகக் குறைக்க வேண்டும் என்கிறார்.
“15வது பொதுத் தேர்தலுக்குமுன் அதைச் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. ஆனால், முதலில் இளைஞர்களை அரசியலுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு திட்டம் தேவை”, என்றவர் நேற்று மாலை கோலாலும்பூரில் கூறினார்.
இதைப் பள்ளி நிலையில் எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக்குடன் கலந்து பேசப்போவதாக சைட் சித்திக் கூறினார்.
பல நாடுகளில் செய்யப்படுவதுபோல் மலேசியாவிலும் உயர் இடைநிலைப் பள்ளி நிலையில் மாணவர்களை அரசியலுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றாரவர்.