மலேசியா ரிம20 பில்லியன் செலவிலான கிழக்குக் கரை இரயில் (இசிஆர்எல்) திட்டத்தை மறு ஆய்வு செய்ய சீனாவுடன் பேச்சு நடத்த முற்பட்டிருப்பதை அடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டதை சீனக் குத்தகையாளர் உறுதிப்படுத்தினார்.
மே மாதம் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நிறுத்தப்பட்ட பல பெரிய திட்டங்களில் இதுவும் ஒன்று.
அத்திட்டத்தின் உரிமையாளர் மலேசியன் ரெயில் லிங் சென். பெர்ஹாட் கேட்டுக்கொண்டதால் கட்டுமான வேலைகளை நிறுத்தி வைத்திருப்பதாக சீன குத்தகை நிறுவனம் கூறிற்று.
“அண்மையில் மலேசியன் ரெயில் லிங் சென். பெர்ஹாட்டிடமிருந்து நிறுவனத்துக்குக் கடிதம் வந்தது. அதில் அடுத்த உத்தரவு வரும்வரை இசிஆர்எல் குத்தகை வேலைகளை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது”, என அந்தச் சீன நிறுவனம் ஹாங் காங் பங்குச் சந்தைக்குத் தெரியப்படுத்தி இருந்தது.