ரிஸா-விடம் நான்காவது நாளாக எம்ஏசிசி விசாரணை

முன்னாள்  பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்  மாற்றான்  மகன்   ரிஸா   அசிஸ்   விசாரணைக்காக  இன்று   புத்ரா  ஜெயாவில்  உள்ள   எம்ஏசிசி   தலைமையகம்   வந்தார்.  அவரிடம்   தொடர்ந்து   நான்காவது   நாளாக   விசாரணை   நடைபெறுவது  குறிப்பிடத்தக்கது.

1எம்டிபி பணம்  அவரது   திரைப்படத்   தயாரிப்பு   நிறுவனமான   ரெட்  கிரேனைட்டுக்கு   மாற்றிவிடப்பட்டதாகக்    கூறப்படுவது  குறித்து அவரிடம்   விசாரிக்கப்படுகிறது.

காலை  மணி  9.48க்கு   அவர்   எம்ஏசிசி  தலைமையகம்   வந்ததாக   மலாய்  மெயில்  கூறியது.

அமெரிக்க   நீதித்துறை  (டிஓஜே)  1எம்டிபி-இல்   கையாடப்பட்ட    யுஎஸ்$64 மில்லியன்   ரெட் கிரேனைட்டுக்கு   மாற்றப்பட்டு   த  உல்ப்  அப்  வால்   ஸ்திரிட்  உள்பட  பல   ஹாலிவூட்   படங்களின்  தயாரிப்புக்குப்   பயன்படுத்திக்  கொள்ளப்பட்டதாகக்  கூறியது.

1எம்டிபி- இலிருந்து  யுஎஸ்$238 மில்லியன்   ரிஸா-வின்  வங்கிக்  கணக்குகளுக்கு   மாற்றி  விடப்பட்டது   என்றும்   அதில்  ஒரு  பகுதிதான்  மேற்குறிப்பிட்ட   யுஎஸ்$64 மில்லியன்   என்றும்   டிஓஜே   நம்புகிறது.

அப்பட  நிறுவனம்  களவாடப்பட்ட   பணம்   என்று   தெரிந்தே  அதைப்  படத்  தயாரிப்புகளுக்குப்    பயன்படுத்திக்கொண்டதாகக்  கூறப்படுவதை   மறுத்துள்ளது.

ரிஸா  அப்பணத்தைப்   பயன்படுத்தி   வணிகரான   லோ   தெக்  ஜோ-விடமிருந்து   ஆடம்பரச்  சொத்துகள்  வாங்கியதாகவும்  குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதற்குமுன்    அவர்   1எம்டிபி  பணத்தில்  யுஎஸ்$94 மில்லியன்   தனக்குக்  கிடைத்த    “அன்பளிப்பு”  என்று  கூறிக்கொண்டிருந்ததாக   டிஓஜே  கூறியது.