பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தம் நெருங்கிய ஆலோசகர் டயிம் சைனுடின் “சில குத்தகைகள்” பற்றி பேச்சு நடத்துவதற்காக சீனா செல்கிறார் என நம்புவதாகக் கூறினார்.
“சீன அதிகாரிகளுடன் குத்தகைகள் பற்றிப் பேசுவதற்கு அவர் விரும்புகிறார், அப்படித்தான் நினைக்கிறேன்.
“அவர் என்ன விரும்புகிறாரோ அதைச் செய்யும் உரிமை அவருக்கு உண்டு”, என இன்று புத்ரா ஜெயாவில் யயாசான் பெர்டானாவில் அவர் கூறினார்.
அரசாங்க ஆலோசனை மன்ற உறுப்பினரான டயிமுக்கு ஆலோசனை கூறும் உரிமை உண்டு என்பதால் அவர் கூறும் அலோசனைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது அர்த்தமல்ல எனவும் மகாதிர் தெரிவித்தார்.
“அவருடைய ஆலோசனைகளை நிராகரிக்கும் உரிமை எனக்குண்டு”, என்றாரவர்.
டயிம் கிழக்குக் கரை இரயில் இணைப்பு(இசிஆர்எல்) திட்டத்தையும் சூரியா ஸ்ரேடஜிக் எனர்ஜி ரிசோர்சஸ் (எஸ்எஸ்இஆர்) நிறுவனத்தின் இரு திட்டங்களையும் மறு ஆய்வு செய்வது தொடர்பில் பேச்சு நடத்த இம்மாதப் பிற்பகுதியில் சீனா செல்வார் என்று இதற்குமுன் அறிவிக்கப்பட்டிருந்தது.
மகாதிரும் சீனா செல்வதை. உறுதிப்படுத்தியுள்ளார். அவர் ஆகஸ்ட் மாதம் அங்கு செல்கிறார்.