ஜமால் கைது, ஜொகோவிக்கு டாக்டர் எம் நன்றி

ஜமால் யுனூஸ் கைது தொடர்பில், ஜொகோ விடோடோ-விற்கு டாக்டர் மகாதீர் நன்றி தெரிவித்துகொண்டார்.

ஜூலை 3 தேதியிடப்பட்ட ஒரு கடிதம் வாயிலாக, அந்த இந்தோனேசியப் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதாக இந்தோனேசிய செய்திகள் கூறுகின்றன.

“இந்த ஒத்துழைப்பு, அண்டை நாடு எனும் அடிப்படையில் ஏற்பட்டது என்று நான் நம்புகிறேன்.

“இருநாடுகளும் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும், இரு நாட்டு மக்களுக்கும் இது முன்மாதிரியாக இருக்க வேண்டும்,” என மகாதீர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் கூறியுள்ளன.

கடந்த ஜூலை 2-ம் தேதி, இந்தோனேசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஜமால், நேற்று மலேசியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

மே 25-ம் தேதி, அம்பாங் புத்ரி நிபுணத்துவ மருத்துவமனையில் இருந்து காணாமல் போன அந்த சுங்கை பெசார் அம்னோ தலைவரை, மலேசியக் காவல்துறையினர் தேடிவந்தனர்.

ஜூன் 1-ம் தேதி, போலிஸ் காவலில் இருந்து தப்பியோடிய குற்றத்திற்காக, அவருக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.