மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைவர் முகமட் ஷுக்கிரி அப்துல் மீது முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தொடர்ந்துள்ள சிவில் வழக்கு குறித்து கவலைப்படவில்லை.
அவர் வழக்குத் தொடரட்டும். நான் அதை ஏற்றுக்கொள்வேன் என்று ஷுக்கிரி கூறியதாக த ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
ஷுக்கிரி, ஏஜி டோமி தோமஸ் மற்றும் புக்கிட் அமான் வாணிகக் குற்றங்கள் இலாகா இயக்குனர் அமர் சிங் ஆகியோருக்கு எதிராக நஜிப் வழக்குத் தொடர்ந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
சம்பந்தப்பட்ட இன்னொரு விவகாரத்தில், 1எம்டிபி வழக்கில் உள்ளூர் ஆதரங்கள் மறுஆய்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்றும், வெளிநாட்டு ஆதாரங்கள் இப்போது கவனிக்கப்படுவதாகவும் ஷுக்கிரி மேலும் கூறினார்.
நஜிப் தவறான முறையில் 1எம்டிபியிலிருந்து நிதி பெற்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறார்.
தவறான நடத்தை என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நஜிப் மறுத்து வருகிறார்.
கடந்த புதன்கிழமை நஜிப் மீது கிரிமினல் நம்பிக்கை மோசடி மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேசனலிருந்து நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.
அரசாங்க தமிழ் வானொலியான மின்னல் பண்பலை வானொலியில் அன்றாடம் மாலை 5:00 மணி முதல் முன்னிரவு 7:00 மணி வரையும் சில நாட்களில் 8:00 மணி வரையிலும் செய்தி அறிக்கை, பழைய பாடல்கள், போக்குவரத்து தகவல், ஏதேனும் புதிய அறிக்கை, நேயர்களின் தொலைபேசி உரையாடல், இடையிடையே அறிவிப்பாளர்களின் அக்கப்போரான அரட்டை ஆகியவற்றைக் கேட்டாலும் அலுப்பும் சலிப்பும் ஏற்படும் அளவுக்கு எண்டிரிகோஸ் நிறுவனத்தின் பால் மாவு-நெய் விளம்பரம், ‘மை காப்பி’ விளம்பரம், இணைய கொள்முதல் குறித்த விளம்பரம் ஆகியன மூச்சுக்கு மூச்சு.. .. பேச்சுக்குப் பேச்சு என்ற அளவில் ஒலியேற்றப்படுகிறது.