பிணைப் பணம் கட்டிய நஜிப் தம் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்

எஸ்ஆர்சி   இண்டர்நேசனல்   சென். பெர்ஹாட்  விவகாரம்   தொடர்பில்       நான்கு     குற்றச்சாட்டுகள்  சுமத்தப்பட்டுள்ள   நஜிப்,  தம்  பிணைப்பணமான  ரிம1 மில்லியனில்  ஒரு  பகுதியைத்  திரட்டிக்  கொடுத்த    ஆதரவாளர்களுக்கு    நன்றி   தெரிவித்துக்  கொண்டார்.

நஜிப்   தம்   துணைவியார்   ரோஸ்மா  மன்சூருடன்   காலை   11.45க்கு  ஜாலான்  டூட்டா  நீதிமன்ற   வளாகம்    வந்தார். அவரைக்  கண்டதும்   அங்குக்   காத்திருந்த   அவரின்    ஆதரவாளர்கள்  “பேபாஸ்   நஜிப்” )நஜிப்பை  விடுதலை   செய்)   என்று   முழக்கமிட்டனர்.

நீதிமன்றத்தில்   பிணை  ஆவணங்களில்   கையெழுத்திட்ட   பின்னர்   நஜிப்   ஆதரவாளர்களிடம்   பேசினார்.

“எல்லா  நிலையிலும்   உள்ளவர்கள்    அளித்த    நன்கொடைகளைக்  கண்டு   உள்ளம்  நெகிழ்ந்தேன்………ரஸ்லான்  இன்று   காலை   நன்கொடைகளைக்  கொண்டு   வந்து   கொடுத்தார்”,  என்றார்.

அவர்  குறிப்பிட்டது   கூட்டரசு  பிரதேச   முன்னாள்   இளைஞர்   தலைவர்   ரஸ்லான்  ரபியை.  தாபோங்  சோலிடெரிடி  நஜிப்-புக்கு   இன்று  காலை  மணி  9.30வரை  ரிம489, 166   திரண்டதாக   ரஸ்லான்   தெரிவித்தார்.

நஜிப்பின்   சட்ட   உதவிக்காக   அந்த   நிதி   கடந்த   வியாழக்கிழமை    தொடங்கப்பட்டது.